TNSURB SI Recruitment 2023TNSURB SI Recruitment 2023

தமிழ்நாடு காவல்துறையில் 621 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு. (TNUSRB SI Recruitment 2023):- தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியமானது 621 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (Sub-Inspector) (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை) பணியிடங்களுக்கு நேரடித் தேர்வு நடத்திட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 01 ஜூன் முதல் 30 ஜூன் வரை பெறப்படுகின்றன.

இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணை https://www.tnusrb.tn.gov.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30.06.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம்
வகைவேலை வைப்புகள்
பதவியின் பெயர்Sub-Inspector
காலியிடங்கள்621
நேர்காணல் நாள்30.06.2023
விண்ணப்பிக்கும் முறைOnline

TNSURB SI Recruitment 2023  காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 621 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
Sub-Inspector621

TNUSRB SI Recruitment 2023 பணிக்கான கல்வி தகுதி விபரங்கள்:-

1.Sub-Inspector:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது 01.07.2023 தேதியின்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும். BC, BCM, MBC/DNC ஆகிய பிரிவினர்களுக்கு அதிகபட்சமாக 32 வயதுக்குள்ளும், SC, ST, SCA ஆகிய பிரிவினர்களுக்கு அதிகபட்சமாக 35 வயதுக்குள்ளும், ஆதரவற்ற விதவைகளுக்கு அதிகபட்சமாக 37 வயதுக்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர் பிரிவினர்களுக்கு அதிகபட்சமாக 47 வயதுக்குள்ளும், துறை ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு அதிக பட்சமாக 47 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

TNSURB SI Recruitment 2023
TNSURB SI Recruitment 2023

பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவிஊதியம்
Sub-InspectorRs.36,900 – Rs.1,16,600/-

பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தேர்வு கட்டணமாக ரூபாய்.500/-ம், துறை ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் ரூபாய்.1000/- ஆன்லைன் (Net-Banking / UPI / Debit Card / Credit Card) மூலமாகவும் அல்லது SBI Chellan மூலமாகவும் கட்டணம் கட்டலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SI Recruitment 2023 பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

TNUSRB SI Recruitment 2023 பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnusrb.tn.gov.in/ என்கிற இணையதள பக்கத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SI Recruitment 2023 விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

Apply link

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30.06.2023.

Download Notification PDF