ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை வாய்ப்பு (TNRD Dharmapuri Recruitment 2023):- தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி, அரூர் ஊராட்சி, மற்றும் தருமபுரி ஊராட்சி அலகில் அரசு தலைப்பில் காலியாக உள்ள இரவு காவலர் (Night Watchman), அலுவலக உதவியாளர் (Office Assistant) மற்றும் ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://dharmapuri.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தப் பதவிகளுக்கு தபால் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 21.12.2023.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலை வாய்ப்பு செய்திகள் |
நிறுவனம் | ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, தர்மபுரி மாவட்டம் |
வகை | வேலை வாய்ப்பு |
பதவியின் பெயர் |
|
காலியிடங்கள் | 04 |
கடைசி நாள் | 21.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலியிட விபரங்கள்:-
இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 09 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
---|---|
இரவுக் காவலர் | 01 |
அலுவலக உதவியாளர் | 02 |
ஈப்பு ஓட்டுநர் | 01 |
TNRD Dharmapuri Recruitment 2023 கல்வித் தகுதி விபரங்கள்:-
- இரவுக் காவலர்: இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- அலுவலக உதவியாளர்: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.
- ஈப்பு ஓட்டுநர்: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் சான்றிதழ் வைத்திருத்தல் வேண்டும்.
பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-
- விண்ணப்பதாரர் 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
- ஈப்பு ஓட்டுநர்: ஆதிதிராவிடர், அருந்ததியர், பெண்கள், ஆதரவற்ற விதவை பழங்குடியினர் வயது வரம்பு 42, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் வயது வரம்பு 34, ஆதிதிராவிடர் வயது வரம்பு 42.
- அலுவலக உதவியாளர்: மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் வயது வரம்பு 34, ஆதிதிராவிடர் வயது வரம்பு 37.
- இரவுக் காவலர்: மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் வயது வரம்பு 34.
TNRD Dharmapuri Recruitment 2023 பணிக்கான சம்பள விபரங்கள்:-
- ஈப்பு ஓட்டுநர்: ₹.19,500 – 62,000/-
- அலுவலக உதவியாளர்: ₹.15,700 – 50,000/-
- இரவுக் காவலர்: ₹.15,700 – 50,000/-
- TNRD Dharmapuri Recruitment 2023 பணிக்கு தேர்வு செய்யும் முறை:-
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
TNRD Dharmapuri Recruitment 2023 பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் தர்ம்புரி மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை முறையாக பூர்த்தி செய்து சம்மத்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலகாகவோ 21.12.2023-ம் தேதி 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தாமதமாக கிடைக்கபெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Download Notification PDF
Join Facebook | Click Here |
Join Twitter | Click Here |
Join Google News | Click Here |
Join Whatsapp | Click Here |
Join Telegram | Click Here |