Saturday, July 27, 2024
Homeவேலை வாய்ப்புஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை வாய்ப்பு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை வாய்ப்பு

- Advertisement -

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை வாய்ப்பு (TNRD Coimbatore Recruitment 2023):- கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுனர் (Jeep Driver) பணியிடத்தினை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணையை https://coimbatore.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 19.10.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கோயம்புத்தூர் மாவட்டம்
வகைவேலை வாய்ப்பு
பதவியின் பெயர்ஈப்பு ஓட்டுனர் (Jeep Driver)
காலியிடங்கள்01
கடைசி நாள்19.10.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 01 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
ஈப்பு ஓட்டுனர் (Jeep Driver)01

TNRD Coimbatore Recruitment 2023 கல்வித் தகுதி விபரங்கள்:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு (8th Pass) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழக அரசால் வழங்கப்பட்ட வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றெடுத்தல் வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 01.07.2023 தேதியின் படி குறைந்தபட்சம் 18 வயது முதல் ஆதிதிராவிடர் அருந்ததியினர் பிரிவினர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 42 வயதுக்குள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TNRD Coimbatore Recruitment 2023
TNRD Coimbatore Recruitment 2023

TNRD Coimbatore Recruitment 2023 பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவிஊதியம்
ஈப்பு ஓட்டுனர் (Jeep Driver)Rs.19,500 – Rs.62,000/- plus other allowances

TNRD Coimbatore Recruitment 2023 பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன சுழற்சி அடிப்படையில் ஆதிதிராவிடர் அருந்ததியினருக்கு முன்னுரிமை தரப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு பெண்கள் ஆதரவற்ற விதவைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Coimbatore மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://coimbatore.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தின் வடிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து கல்வி சான்றிதழ் நகல், அனுபவ சான்றிதழ் நகல், இருப்பிட சான்றிதழ் நகல், ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், e-mail id, Mobile No. Character Certificate, Conduct Certificate மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு 19.10.2023 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF & Application Format PDF

Join FacebookClick Here
Join TwitterClick Here
Join Google NewsClick Here
Join WhatsappClick Here
Join TelegramClick Here
- Advertisement -
RELATED ARTICLES