Saturday, September 7, 2024
Homeவேலை வாய்ப்புஊரக வளர்ச்சித் துறையில் பல்வேறு வேலைவாய்ப்பு

ஊரக வளர்ச்சித் துறையில் பல்வேறு வேலைவாய்ப்பு

- Advertisement -

ஊரக வளர்ச்சித் துறையில் பல்வேறு வேலைவாய்ப்பு (TNRD Ariyalur Recruitment 2023):- அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பல்வேறு காலிபணி இடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணையை https://ariyalur.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.10.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, அரியலூர் மாவட்டம்
வகைவேலை வாய்ப்பு
பதவியின் பெயர்பல்வேறு
காலியிடங்கள்06
கடைசி நாள்15.10.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 06 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
Solid Waste Management & Sanitation Expert02
Liquid Waste Management Expert01
Planning, Convergence & Monitoring01
IEC Consultants02

TNRD Ariyalur Recruitment 2023 கல்வித் தகுதி விபரங்கள்:-

Solid Waste Management & Sanitation Expert & Liquid Waste Management Expert: இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Bachelor Degree in Environment Engineering / Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒன்று முதல் இரண்டு வருட பணி அனுபவம் இருத்தல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Planning, Convergence & Monitoring: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் B.Tech / MBA / M.Sc. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

IEC Consultants: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் P.G.Degree in Mass Communication / Mass Media தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 முதல் 3 வருட பணி அனுபவம் இருத்தல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க அதிகாரிகள், கல்வியாளர்கள், சமூக ஊடங்களில் செல்வாக்கு உள்ளவர்களுடன் தொடர்பு கொள்வது. கணினியில் MS Word, Power Point, Adobe Photoshop தெரிந்திருக்க வேண்டும். வீடியோ தயாரித்தல், மீம் தயாரித்தல், சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் உருவாக்குதல் போன்றவற்றில் அனுபவம் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான வயது வரம்பு விபரங்கள் குறிப்பிடப்படவில்லை.

TNRD Ariyalur Recruitment 2023
TNRD Ariyalur Recruitment 2023

TNRD Ariyalur Recruitment 2023 பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவிஊதியம்
Solid Waste Management & Sanitation ExpertRs.35,000/-
Liquid Waste Management ExpertRs.35,000/-
Planning, Convergence & MonitoringRs.35,000/-
IEC ConsultantsRs.25,000/-

TNRD Ariyalur Recruitment 2023 பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Ariyalur மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ariyalur.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் Notification பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து கல்வி சான்றிதழ் நகல், அனுபவ சான்றிதழ் நகல், இருப்பிட சான்றிதழ் நகல், ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், e-mail id, Mobile No. Character Certificate, Conduct Certificate மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு 15.10.2023 ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Join FacebookClick Here
Join TwitterClick Here
Join Google NewsClick Here
Join WhatsappClick Here
Join TelegramClick Here
- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -