மருத்துவ கவுன்சில் 300-கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு (tn-mrb-recruitment-2023):- தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் Lab Technician-Grade-III பதவிகளை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான ஆண், பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பதவிக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://www.mrb.tn.gov.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 02.07.2023.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலை வாய்ப்பு செய்திகள் |
நிறுவனம் | Medical Services Recruitment Board (MRB) |
வகை | வேலை வாய்ப்புகள் |
பதவியின் பெயர் | Lab Technician Grade-III |
காலியிடங்கள் | 332 |
நேர்காணல் நாள் | 02.07.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
காலியிட விபரங்கள்:-
Lab Technician Grade-III பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 332 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
Lab Technician Grade-III | 332 |
tn-mrb-recruitment-2023 கல்வித் தகுதி விபரங்கள்:-
1.Lab Technician Grade-III:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் ஒரு வருட மெடிக்கல் டெக்னாலஜி கோர்ஸ் (Medical Technology Course) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல உடல் தகுதியும், பார்வை திறனும், வெளிவட்டாரத்தில் வேலை புரியவும் தயாராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 01.07.2023 தேதியின்படி பொது பிரிவினர்கள் 18 வயது முதல் அதிகபட்சமாக 32 வயதுக்குள்ளும், மாற்றத்திறனாளிகள் அதிகபட்சமாக 42 வயதிற்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர் அதிகபட்சமாக 50 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். SC / ST / SCA / BC /BCM / MBC&DNC / DW / DAP(PH) பிரிவினர்களுக்கு எந்தவித வயது வரம்பு கிடையாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிக்கான சம்பள விபரங்கள்:-
பதவி | ஊதியம் |
LabTechnician Grade-III | Rs.13,000-62,000/- |
Lab Technician பணிக்கு தேர்வு செய்யும் முறை:-
இந்த பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
tn-mrb-recruitment-2023 விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொது பிரிவினர்கள் ரூபாய்.600/- SC / ST / SCA / DAP(PH) / DW பிரிவினர்கள் ரூபாய்.300/- ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும்
tn-mrb-recruitment-2023 பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியும் திறமையும் உள்ள பெண் விண்ணப்பதாரர்கள் www.mrb.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை சரியாக பூர்த்தி செய்து மின்னஞ்சல் முகவரி மற்றும் கைபேசி எண் ஆகியவற்றை முறையாக பூர்த்தி செய்திட வேண்டும். விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். மற்ற முறையில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.