Wednesday, July 17, 2024
Homeவேலை வாய்ப்புஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

- Advertisement -

ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு (Aavin Recruitment):- கோவை மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள Veterinary Consultant பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ பத்திரிகை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கு நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டிய நாள் 25.05.2023.


இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.








வேலை வாய்ப்பு செய்திகள்
































நிறுவனம்ஆவின் நிறுவனம், கோவை மாவட்டம்
வகைஅரசு வேலைகள்
பதவியின் பெயர்Veterinary Consultant
காலியிடங்கள்04
நேர்காணல் நாள்25.05.2023
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்
Official Websiteaavincoimbatore

காலியிட விபரங்கள்:-


இந்த பதவிக்கான மொத்த காலியிடங்கள் 04 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.













பதவியின் பெயர்காலியிடங்கள்
Veterinary Consultant04

Aavin Recruitment கல்வித் தகுதி விபரங்கள்:-


Veterinary Consultant:-


இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் B.V.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் கண்டிப்பாக இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும். அத்துடன் அரசு அங்கீகரிக்கப்பட்ட இரு சக்கர வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும்.


பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-


இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண், பெண் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 50 வயதுக்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

பணிக்கான சம்பள விபரங்கள்:-













பதவிஊதியம்
Veterinary ConsultantRs.43,000/- Per Month

பணிக்கு தேர்வு செய்யும் முறை:-


இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-


இந்த பதவிக்கு விண்ணப்பக்க விரும்புபவர்கள் தேர்வு கட்டணமோ அல்லது விண்ணப்ப கட்டணமோ எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.


பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-


இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கோயம்புத்தூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ முகவரியில் 25.05.2023 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். நேர்காணலில் கலந்து கொள்ள செல்லும் போது கல்வி சான்றிதழ், அனுபவ சான்றிதழ்கள், இருப்பிட சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் பிற அசல் சான்றிதழ்கள் உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.


நேர்காணல் நடைபெறும் முகவரி:-


New Dairy Complex,
Pachapalayam,
Kalampalayam (Post),
Perur (Via),
Coimbatore – 641 010.

- Advertisement -
RELATED ARTICLES