Monday, July 8, 2024
Homeவேலை வாய்ப்புTNRD Coimbatore Recruitment 2023. அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பியங்கள்!!!

TNRD Coimbatore Recruitment 2023. அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பியங்கள்!!!

- Advertisement -

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு வேலை வாய்ப்பு (TNRD Coimbatore Recruitment 2023):- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய தலைப்பில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) காலிபணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணையை https://coimbatore.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.11.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, கோயம்புத்தூர் மாவட்டம்
வகைவேலை வாய்ப்பு
பதவியின் பெயர்அலுவலக உதவியாளர் (Office Assistant)
காலியிடங்கள்01
கடைசி நாள்15.11.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 01 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
அலுவலக உதவியாளர் (Office Assistant)01

TNRD Coimbatore Recruitment 2023 கல்வித் தகுதி விபரங்கள்:-

அலுவலக உதவியாளர் (Office Assistant): இந்தப் பதவிக்கு விண்ணப்பத்தை விரும்புபவர்களின் கல்வித் தகுதியானது குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், மிதிவண்டி ஓட்ட தேர்ந்தெடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

இந்த பதவியானது பிற்படுத்தப்பட்டோர் (BC) (பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் தவிர)  இன சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வகுப்பை சேர்ந்தவர்களின் வயது வரம்பானது 01.07.2023 அன்று தேதியின்படி குறைந்தபட்ச வயது வரம்பு 18 முதல் அதிகபட்ச வயது வரும்போது 34 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TNRD Coimbatore Recruitment 2023
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

TNRD Coimbatore Recruitment 2023 பணிக்கான சம்பள விபரங்கள்:-

இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு மாதம் (Level-1) ரூபாய்.15,700 – 50,000/-  தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

TNRD Coimbatore Recruitment 2023 பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Welfare Department Recruitment 2023. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் வேலைவாய்ப்பு!!!

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

TNRD Coimbatore Recruitment 2023 பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://coimbatore.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து கல்வித்தகுதி சான்றிதழ் நகல், இருப்பிட சான்றிதழ் நகல், அனுபவ சான்றிதழ் நகல், ஜாதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சம்மந்தப்பட்ட அலுவலகத்தில்  15.11.2023-ம் தேதி மாலை 05.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

Download Notificatiion PDF & Application Form

Join our groups for latest updates:

Join FacebookClick Here
Join TwitterClick Here
Join Google NewsClick Here
Join WhatsappClick Here
Join TelegramClick Here
- Advertisement -
RELATED ARTICLES