Monday, July 8, 2024
Homeவேலை வாய்ப்புஅரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனையில் வேலை வாய்ப்பு.

அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனையில் வேலை வாய்ப்பு.

- Advertisement -

அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனையில் வேலை வாய்ப்பு:- திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் காலியாக உள்ள ED Secretary (Emergency Medicine Department Secretary) காலி பணியிடத்தினை நிரப்புவதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. 

இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணையை https://tiruvannamalai.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.05.2023.

GMC Hospital Recuirment
Thiruvannamalai Medical College Hospital Recruitment

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்மாவட்ட நலவாழ்வு சங்கம், திருவண்ணாமலை
வகைவேலை வாய்ப்பு
பதவியின் பெயர்ED Secretary (Emergency Medicine Department Secretary)
காலியிடங்கள்01
கடைசி நாள்15.05.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 01 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
ED Secretary (Emergency Medicine Department Secretary)01

ED Secretary கல்வித் தகுதி விபரங்கள்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Indian Nursing Council அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma / B.Sc. (Nursing) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சமாக 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவிஊதியம்
ED Secretary (Emergency Medicine Department Secretary)Rs.14,000/-

பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவார்கள் திருவண்ணாமலை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிப்பாணையை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். அறிவிப்பாணையில் குறிப்பிட்டுள்ளபடி ஒரு விண்ணப்ப படிவம் தயார் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும். கண்டிப்பாக கல்வித் தகுதி சான்றிதழ்கள், அனுபவ சான்றிதழ்கள் மற்றும் பிற சான்றிதழ்களின் அசல் நேர்காணலின் போது கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பபடிவத்துடன் இணைக்க வேண்டியவை:-

  1. பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ்.
  2. இருப்பிடச் சான்று.
  3. சாதிச்சான்று.
  4. மாற்றுத்திறனாளி / விதவை / கணவனால் கைவிடப்பட்டவர் / மூன்றாம் பாலினத்தவர் சான்று.
  5. கொரோன பெருந்தொற்று காலத்தில் அரசு மருத்துவமனையில் பணிபுறிந்த சான்று இருப்பின் சம்மந்தப்பட்ட மாவட்ட துறை தலைவரிடம் (DEAN / DDHS / JDHS) சான்று சமர்ப்பிக்கவும். தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்திருப்பின் இணை இயக்குநர் சான்று சமர்ப்பிக்கவும்.
  6. TNNMC பதிவுச்சான்று.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
பழைய அரசு மருத்துவமனை வளாகம்,
செங்கம் சாலை,
திருவண்ணாமலை.

Download Notification PDF

- Advertisement -
RELATED ARTICLES