Monday, July 8, 2024
Homeவேலை வாய்ப்புThoothukudi TNRD Recruitment 2023. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை!!!

Thoothukudi TNRD Recruitment 2023. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை!!!

- Advertisement -

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை (Thoothukudi TNRD Recruitment):- தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தூத்துக்குடி மாவட்டம், மாவட்ட இயக்கம் மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டார இயக்கு மேலாண்மை அலகுகளில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Coordinator) பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான சம்மந்தப்பட்ட வட்டாரத்தை சார்ந்த பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

இந்த பதவிகளுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணையை https://thoothukudi.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 25.10.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தூத்துக்குடி
வகைவேலை வாய்ப்பு
பதவியின் பெயர்வட்டார ஒருங்கிணைப்பாளர்
காலியிடங்கள்02
கடைசி நாள்25.10.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 02 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
வட்டார ஒருங்கிணைப்பாளர்02

Thoothukudi TNRD Recruitment கல்வித் தகுதி விபரங்கள்:-

பதவிகல்வித்தகுதி
வட்டார ஒருங்கிணைப்பாளர்
  1. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் ஏதாவதொரு பாடத்தில் பட்டப்படிப்பு (Any Degree) படித்திருத்தல் வேண்டும்.
  2. குறைந்த பட்சம் 3 மாதம் MS Office சான்றிதழ் பயிற்சி முடித்திருக்க வேண்டும் அல்லது கணினி அறிவியல் அல்லது கணினி சார்ந்த படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  3. குறந்தது 2 ஆண்டுகள் இத்திட்டம் குறித்து முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

nilgiris tnrd recruitment
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 28 வயதுக்குள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Thoothukudi TNRD Recruitment பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவிஊதியம்
வட்டார ஒருங்கிணைப்பாளர்₹.12,000/- மாதம்

Thoothukudi TNRD Recruitment பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

Thoothukudi TNRD Recruitment பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://thoothukudi.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பாணையை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை ஒரு விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து கல்விச் சான்றிதழ் நகல், அனுபவச் சான்றிதழ் நகல், இருப்பிடச் சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்களுடன்  சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் 25.10.2023-ம் தேதி மாலை 05.45 மணிக்குள் சம்மந்த்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

Download Notification PDF & Application Format PDF

Join our below given groups for latest updates
Join FacebookClick Here
Join TwitterClick Here
Join Google NewsClick Here
Join WhatsappClick Here
Join TelegramClick Here
- Advertisement -
RELATED ARTICLES