Monday, July 8, 2024
Homeவேலை வாய்ப்புசமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் வேலைவாய்ப்பு

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் வேலைவாய்ப்பு

- Advertisement -

சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு (Social Welfare Department Recruitment 2023):- நீலகிரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் காலியாக உள்ள சமூக நல பணியாளர் (Case Worker) பதவியினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 05.09.2023.

இந்த பதவிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும், உள்ளூரில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணை மற்றும் விண்ணப்பப் படிவத்தை https://nilgiris.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 05.09.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்நீலகிரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை
வகைவேலைவாய்ப்பு
பதவியின் பெயர்Case Worker
காலியிடங்கள்02
நேர்காணல் நாள்05.09.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

Apply also – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலை

Social Welfare Department 2023 காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 02 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
Case Worker01

Social Welfare Department 2023 கல்வித் தகுதி விபரங்கள்:-

1.Case Worker:-

சமூகப்பணி ஆலோசனை உளவியல் அல்லது மனித வள மேலாண்மையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒரு வருடம் தொண்டு நிறுவனங்கள் அரசு சார்ந்த திட்டங்களில் பணிபுரிந்தவராகவும் பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஒரு வருடம் ஆலோசனை வழங்குவதில் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். இந்தப் பதவிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது மேலும் உள்ளூரில் வசிப்பவராகவும் இருத்தல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயது வரம்பானது குறைந்தபடசம் 21 வயது முதல் அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Coimbatore Social Welfare Department
Coimbatore Social Welfare Department Recruitment

பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவிஊதியம்
Case WorkerRs.15,000/-

Social Welfare Department 2023 பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

Social Welfare Department 2023 பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நீலகிரி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான என்கிற https://nilgiris.nic.in/ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்ப படிவத்தில் முறையாக பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 05.09.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாகம், பிங்கர் போஸ்ட், உதகை – 643 006, நீலகிரி மாவட்டம்.

தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 05.09.2023.

Download Notification PDF

- Advertisement -
RELATED ARTICLES