Friday, September 6, 2024
HomeCentral Govt Jobsடிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு...

டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு…

- Advertisement -

RFCL Recruitment 2024: ஹைதராபாத் ஆர்.எஃப்.சி.எல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு மாதம் ரூ.23 ஆயிரம் முதல் ரூ.77 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தெலுங்கானா மாநிலம் பெத்தபள்ளியில் ஆர்.எஃப்.சி.எல் எனும் உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் லிமிடெட் (Ramagundam Fertilizers and Chemicals Limited) நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

காலியிடங்கள்: ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் (ப்ரொடக்சன்) பணிக்கு 11 பேர், என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் (ப்ரொடக்சன்) பணிக்கு 6 பேர், ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் (மெக்கானிக்கல்) பணிக்கு 3 பேர், என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் (எலக்ட்ரிக்கல்) பணிக்கு ஒருவர், ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் (இன்ஸ்ட்ரூமென்டேஷன்) பணிக்கு 4 பேர், என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் (இன்ஸ்ட்ரூமென்டேஷன்) பணிக்கு 2 பேர், ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் (கெமிக்கல்) பணிக்கு 2 பேர், அலுவலக உதவியாளர் பணிக்கு 6 பேர் என மொத்தம் 35 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி: ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் (ப்ரொடக்சன்), என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் (ப்ரொடக்சன்) பணிக்கு டிப்ளமோ கெமிக்கல் என்ஜினீயரிங் டெக்னாலஜி, பிஎஸ்சி இயற்பியல், வேதியியல், கணிதம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் (மெக்கானிக்கல்) பணிக்கு டிப்ளமோ மெக்கானிக்கல்/டெக்னாலஜி, என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் (எலக்ட்ரிக்கல்) பணிக்கு டிப்ளமோ எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் டெக்னாலஜி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

RFCL Recruitment 2024: ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் (இன்ஸ்ட்ரூமென்டேஷன்) பணிக்கு, என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் (இன்ஸ்ட்ரூமென்டேஷன்) பணிகளுக்கு டிப்ளமோ இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன், அப்ளைடு இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கண்ரோல் என்ஜினீயரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் (கெமிக்கல்) பணிக்கு பிஎஸ்சி வேதியியல், அலுவலக உதவியாளர் பணிக்கு ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்: என்ஜினியரிங் அசிஸ்டன்ட் பணிகளுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.77 ஆயிரம் வரையும், ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டன்ட், அலுவலக உதவியாளர் பணிகளுக்கு மாதம் ரூ.23 ஆயிரம் முதல் ரூ.56 ஆயிரத்து 500-ம் மாத சம்பளமாக வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு: இன்ஜினியரிங் அசிஸ்டன்ட் பணிகளுக்கு 40 வயதுக்குள்ளும், ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டன்ட் மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு மூன்று வயது வரையும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ஐந்து வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது முதல் 15 வயது வரையும் தளர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.rfcl.co.in/ என்கிற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மார்ச் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணிகளுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூபாய்.200/- செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், துரை சார்ந்த பணியாளர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பம் செய்வோர் கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here.

Also Read:-

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -