தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம், மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு (NUHM Coimbatore Recruitment):- கோயம்புத்தூர் மாவட்டம் தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக காலியாக உள்ள கணக்கு உதவியாளர் (Account Assistant), மற்றும் தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator) காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பதவிகளுக்கு நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டிய நாள் 26.06.2023.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலை வாய்ப்பு செய்திகள் |
நிறுவனம் | தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம், மாவட்ட நலவாழ்வு சங்கம், கோயம்புத்தூர் |
வகை | வேலை வாய்ப்பு |
பதவியின் பெயர் |
|
காலியிடங்கள் | 02 |
நேர்காணல் நாள் | 26.06.2023 |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
NUHM Coimbatore Recruitment காலியிட விபரங்கள்:-
இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 02 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
கணக்கு உதவியாளர் (Account Assistant) | 01 |
தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator) | 01 |
கல்வித் தகுதி விபரங்கள்:-
1.கணக்கு உதவியாளர் (Account Assistant):-
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் PG Degree Or PG Degree in B.com. or M.Com. (1 year of experience in the relevant field required) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2. தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator):-
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Any Bachelor’s Degree (with 1 year of experience in the relevant field required) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-
1.கணக்கு உதவியாளர்:-
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது 35 வயதிற்குள் இருக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2. தரவு உள்ளீட்டாளர்:-
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது 35 வயதிற்குள் இருக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
NUHM Coimbatore Recruitment பணிக்கு தேர்வு செய்யும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
NUHM Coimbatore Recruitment பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பக்க விரும்பும் நபர்கள் இரண்டு புகைப்படங்களுடன் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் 26.06.2023 அன்று காலை 10 மணி அளவில் கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேரில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.