Monday, July 8, 2024
Homeவேலை வாய்ப்புதேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேலை வாய்ப்பு

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேலை வாய்ப்பு

- Advertisement -

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேலை வாய்ப்பு:- தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சென்னை மண்டலத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பாணையை https://www.greentribunal.gov.in/ என்கின்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 03.05.2023.

இந்த பதவிக்கான அறிவிப்பாணை, விண்ணப்ப படிவம், காலியிடங்கள், கல்வித் தகுதி விபரங்கள், அனுபவம், ஊதிய விபரங்கள், வயதுவரம்பு விபரங்கள், விண்ணப்ப கட்டண விபரங்கள், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து எங்களது இணையதளத்தை பின் தொடர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நிறுவனம்தேசிய பசுமை தீர்ப்பாயம், சென்னை.
பதவியின் பெயர்அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்01
விண்ணப்பிக்க கடைசி தேதி03.05.2023
விண்ணப்பிக்கும் முறைOffline
இணையதளம்https://www.greentribunal.gov.in/
பதவிக்கான காலியிட விபரங்கள்:-

இந்த பதவிக்கென ஒரு காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவிக்கான கல்வி தகுதி விபரங்கள்:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Any Degree பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயத்தில் பணி அனுபவம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். B.L. / L.L.B. பட்டம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பதவிக்கான ஊதிய விபரங்கள்:-

இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதி, திறமை, அனுபவம் இவற்றின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பதவிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சமாக 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டண விபரங்கள்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கும் முறை:-

இந்த பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிக்கு விண்ணப்பத்தை விரும்புபவர்கள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பாணியை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து கல்வி சான்றிதழ்களின் நகல், இருப்பிட சான்றிதழ் நகல், ஆதார் அடையாள அட்டை நகல், அனுபவ சான்று நகல், 2 புகைப்படம் மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு தபால் மூலமாக 03.05.2023 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தாமதமாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் நிராகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

Registrar,
National Green Tribunal,
Southern Zone Bench,
Kalas Mahal,
PWD Estate,
Chepauk,
Chennai – 600 005.

Download Notification PDF

- Advertisement -
RELATED ARTICLES