Friday, July 5, 2024
HomeCoimbatore District Jobsகூட்டுறவு சங்கங்களில் அரசு வேலை வாய்ப்பு. விண்ணப்பிக்க தவறாதீர்!!!

கூட்டுறவு சங்கங்களில் அரசு வேலை வாய்ப்பு. விண்ணப்பிக்க தவறாதீர்!!!

- Advertisement -

கூட்டுறவு சங்கங்களில் அரசு வேலை வாய்ப்பு (Cooperative Society Recruitment 2023):- கோயம்புத்தூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் /  மேற்பார்வையாளர் / செயலாளர் / இளநிலை உதாவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணையை https://www.drbcbe.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தப் பதவிகளுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 01.12.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Follow Us on Google News

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்கூட்டுறவு சங்கம், கோயம்புத்தூர் மாவட்டம்
வகைவேலை வாய்ப்பு
பதவியின் பெயர்
  1. உதவியாளர்
  2. மேற்பார்வையாளர்
  3. செயலாளர்
  4. இளநிலை உதாவியாளர்
காலியிடங்கள்110
கடைசி நாள்01.12.2023
விண்ணப்பிக்கும் முறைOnline (https://www.drbcbe.in/)

காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 110 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
உதவியாளர்97
மேற்பார்வையாளர்02
செயலாளர்04
இளநிலை உதவியாளர்07

Cooperative Society Recruitment 2023 கல்வித் தகுதி விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு (Any Degree) மற்றும் கூட்டுறவு பயிற்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு அறிவிப்பாணையை படிக்கவும்.

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

  • விண்ணப்பதாரர் 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
  • ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், / சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) மற்றும் இவ்வகுப்புகளைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை.
  • இதர வகுப்பினர் (OC) – 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • அனைத்து இனத்தச் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு இல்லை.
  • இதர வகுப்பினைச் (OC) சார்ந்த முன்னாள் இராணுவத்தினர் – 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • இதர வகுப்பினைச் (OC)சார்ந்த மாற்றுத்திறாளிகள் – 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.

Cooperative Society Recruitment 2023 பணிக்கான சம்பள விபரங்கள்:-

சம்பள விபரங்களுக்கு அறிவிப்பாணையை படிக்கவும்.

Cooperative Society Recruitment 2023 பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்

  • ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்து பிரிவையும் சார்ந்த மாற்றுத்திறனாளிகள், அனைத்து பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் ₹.250/- ஆகும்.
  • இதர பிரிவை சார்ந்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ₹.500/- ஆகும்.
  • விண்ணப்ப கட்டணங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்தப்பட வேண்டும்.

பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவம் https://www.drbcbe.in/ என்கிற இணையதளம் மூலம் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்ய கடைசி நாள் 01.12.2023 அன்று மாலை 5:45 மணி வரை பதிவேற்றம் செய்யலாம்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்:

24.12.2023 முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை

Download Notification PDF

Join FacebookClick Here
Join TwitterClick Here
Join Google NewsClick Here
Join WhatsappClick Here
Join TelegramClick Here

 

- Advertisement -
RELATED ARTICLES