Monday, July 8, 2024
HomeTN Jobsஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வேலை

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வேலை

- Advertisement -

TNHRCE Recruitment 2024: அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மருதமலை மற்றும் அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் திருக்கோயில், வடவள்ளியில் காலியாக உள்ள பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்து சமயத்தை சார்ந்த தகுதியும், ஆர்வமும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்கண்ட பதவி/பதவிகளுக்கான கல்வித்தகுதி, அனுபவம், சம்பள விவரங்கள், காலியிட விவரங்கள், இன சுழற்சி விபரங்கள், எப்படி விண்ணப்பிப்பது போன்ற மற்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Table of contents:

TNHRCE Recruitment 2024 வேலைக்கான விவரங்கள்:

நிறுவனம்இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE)
வகைTN Jobs
பதவியின் பெயர்பல்வேறு
காலியிடங்கள்21
பணியிடம்மருதமலை மற்றும் வடவள்ளி
ஆரம்ப நாள்06.03.2024
கடைசி நாள்05.04.2024
விண்ணப்பிக்கும் முறைதபால்/நேரில்
இணையதளம்https://hrce.tn.gov.in/

TNHRCE Recruitment பதவிகளுக்கான காலியிடங்கள்:

வ.எண்.பதவியின் பெயர்காலியிடம்
முதன்மை திருக்கோயில், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மருதமலை
1.டிக்கெட் விற்பனை எழுத்தர்01
2.அலுவலக உதவியாளர்02
3.காவலர்04
4.திருவலகு02
5.விடுதி காப்பாளர்01
6.பல வேலை01
7.ஓட்டுநர்05
8.பிளம்பர் கம் பம்ப் ஆப்பரேட்டர்01
9.மின் உதவியாளர்01
10.மினி பஸ் கிளீனர்01
உபகோயில், அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் திருக்கோயில், வடவள்ளி
11.காவலர்01
12.திருவலகு01

TNHRCE Recruitment கல்வித்தகுதி விவரங்கள்:

TNHRCE Recruitment 2024 அறிவிக்கையின் படி கல்வித்தகுதி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதன்மை திருக்கோயில், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மருதமலை:

1. டிக்கெட் விற்பனை எழுத்தர்:

  • 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

2. அலுவலக உதவியாளர்:

  • 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. காவலர்:

  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

4. திருவலகு:

  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

5. விடுதி காப்பாளர்:

  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

6. பல வேலை:

  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

7. ஓட்டுநர்:

  1. 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  2. முதலுதவி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும் குறந்தது ஓராண்டு ஓட்டுநர் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

8. பிளம்பர் கம் பம்ப் ஆப்பரேட்டர்:

  1. அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் குழாய் தொழில்/குழாய் பணியர் பாடப்பிரிவில் வழங்கப்படும் தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  2. தொடர்புடைய பிரிவில் ஐந்து வருடம் அல்லது இரண்டு வருடம் தொழில் பயிற்சி (Apprentice) அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

9. மின் உதவியாளர்:

  1. அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின் பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  2. மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து ‘H’ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

10. மினி பஸ் கிளீனர்:

  1. 8-ம் வகுப்பு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மோட்டார் உத்தி பற்றி நங்கறிந்த நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

உபகோயில், அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் திருக்கோயில், வடவள்ளி:

11. காவலர்:

  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

12. திருவலகு:

  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

TNHRCE Recruitment வயது வரம்பு விவரங்கள்:

TNHRCE Recruitment 2024 அறிவிக்கையின் படி வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பு 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

TNHRCE Recruitment சம்பள விவரங்கள்:

TNHRCE Recruitment 2024 Notification-ன் படி சம்பள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பதவியின் பெயர்சம்பளம்
முதன்மை திருக்கோயில், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மருதமலை
டிக்கெட் விற்பனை எழுத்தர்₹.18,500 – 58,600/- Level 22
அலுவலக உதவியாளர்₹.15,900 – 50,400/- Level 17
காவலர்₹.15,900 – 50,400/- Level 17
திருவலகு₹.15,900 – 50,400/- Level 17
விடுதி காப்பாளர்₹.15,900 – 50,400/- Level 17
பல வேலை₹.15,700 – 50,000/- Level 16
ஓட்டுநர்₹.18,500 – 58,600/- Level 22
பிளம்பர் கம் பம்ப் ஆப்பரேட்டர்₹.18,000 – 56,900/- Level 19
மின் உதவியாளர்₹.16,600 – 52,400/- Level 18
மினி பஸ் கிளீனர்₹.15,700 – 50,000/- Level 16
உபகோயில், அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் திருக்கோயில், வடவள்ளி
காவலர்₹.11,600 – 36,800/- Level 12
திருவலகு₹.10,000 – 31,500/- Level 10

TNHRCE Recruitment கட்டண விவரம்:

TNHRCE Recruitment 2024 Notification-ல் குறிப்பிட்டுள்ளது படி

இந்த பதவிகளுக்கென எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.

TNHRCE Recruitment தேர்வு செய்யப்படும் முறை:

TNHRCE Recruitment அறிவிக்கையின் படி தேர்வு முறை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் (Interview) மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

TNHRCE Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

TNHRCE Recruitment அறிவிக்கையின் படி விண்ணப்பிக்க வேண்டிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் TNHECE-ன் அதிகார பூர்வ இணையதளமான https://hrce.tn.gov.in/.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிபாணையை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்ட அனைத்து தகவல்களை ஒரு விண்ணப்பப்படிவத்தில் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனைத்து சான்றிதழ் நகல்களை இணைத்து கடைசி நாளுக்குள் அனுப்ப வேண்டும். தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TNHRCE Recruitment Notification-ல் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டிய விவரங்கள்:-

விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிக்குரிய சான்றிதழ்கள் மற்றும் கூடுதல் கல்வித்தகுதிக்கான சான்றிதழ்கள் மற்றும் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்ற பிற ஆவணங்களுக்கு அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் (Attested Xerox copy only) பெற்று அனுப்ப வேண்டும்.

விண்ணப்பதாரர் வயதிற்கான சான்று ஆவணம் அல்லது கல்வி நிலையத்தால் வழங்கப்பட்ட மாற்று சான்றிதழ் (Transfer Certificate) நகல் இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: துணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மருதமலை, பேரூர் வட்டம், கோவை மாவட்டம் – 641 046.

TNHRCE Recruitment 2024 முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க வேண்டிய ஆரம்ப தேதி06.03.2024
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி05.04.2024

TNHRCE Recruitment முக்கியமான இணைப்புகள்:

இணையதளம்Click Here
அறிவிக்கை & விண்ணப்பப்படிவம்Click to Download

TNHRCE Recruitment 2024 அறிவிப்பு:

TNHRCE Recruitment 2024

Read also:

- Advertisement -
RELATED ARTICLES