Sunday, July 7, 2024
HomeTN Jobsஇந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு

இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு

- Advertisement -

TNHRCE Recruitment 2024: இந்து சமய அறநிலையத் துறையில் பக்தி நூல்கள் பதிப்பிக்கும் பணிகளும் மூலிகை சுவரோவியங்கள், ஓலைச்சுவடிகள் பாதுகாக்கும் பணிகளுக்கு இந்து சமயத்தை சார்ந்த தகுதியும், ஆர்வமும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்கண்ட பதவி/பதவிகளுக்கான கல்வித்தகுதி, அனுபவம், சம்பள விவரங்கள், காலியிட விவரங்கள், இன சுழற்சி விபரங்கள், எப்படி விண்ணப்பிப்பது போன்ற மற்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Table of contents:

TNHRCE Recruitment 2024 வேலைக்கான விவரங்கள்:

நிறுவனம்இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE)
வகைTN Jobs
பதவியின் பெயர்பல்வேறு
காலியிடங்கள்09
பணியிடம்தமிழ் நாடு முழுவதும்
ஆரம்ப நாள்15.02.2024
கடைசி நாள்02.03.2024
விண்ணப்பிக்கும் முறைதபால்/நேரில்
இணையதளம்https://hrce.tn.gov.in/

TNHRCE Recruitment பதவிகளுக்கான காலியிடங்கள்:

S.No.பதவியின் பெயர்காலியிடங்கள்
1.துணை ஆசிரியர்01
2.சுவடியியல் வல்லுநர்01
3.கணினி வல்லுநர்02
4.தொழில் நுட்ப வல்லுநர் / மின்படியாக்கப் பணியாளர் (மின்படியாக்கம்)01
5.தொல்லியல் / தொன்மை ஓவியங்கள் குறித்த ஆய்வு அலுவலர்01
6.மரபு ஓவிய புணரமைப்பாளர்01
7.ஆய்வு கூட உதவியாளர்01
8.ஆய்வு கூடத்தில் வேதியியல் கருவிகளை சுத்தம் செய்யும் உதவியாளர்01

TNHRCE Recruitment 2024 கல்வித்தகுதி விவரங்கள்:

TNHRCE Recruitment 2024 அறிவிக்கையின் படி கல்வித்தகுதி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. துணை ஆசிரியர்:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில்

  1. MA – தமிழ் / இதழியல் / தொல்லியல் தேர்ச்சி
  2. பதிப்பு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  3. வயது 50-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2. சுவடியியல் வல்லுநர்:

  • தமிழிலக்கியத்தில் முனைவர் பட்டமும் ஓலைச்சுவடிப் பட்டயச் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். சுவடி நூலாக்கப்பணியில் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

3. கணினி வல்லுநர்:

  • ஏதாவது ஒரு பட்டப்படிப்பு / ஓர் ஆண்டு சுவடியில் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். மற்றும் DTP & Indesign / Photoshop தகுதி பெற்றிருக்க வேண்டும்.

4. தொழில் நுட்ப வல்லுநர் / மின்படியாக்கப் பணியாளர் (மின்படியாக்கம்):

  • கணினி பாடப்பிரிவில் இளம் அறிவியல் பட்டம்/ஊடகம் மற்றும் காட்சி தொடர்பியல், ஓர் ஆண்டு சுவடியியல் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். மின்படியாக்கத்தில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

5. தொல்லியல் / தொன்மை ஓவியங்கள் குறித்த ஆய்வு அலுவலர்:

  • தொல்லியல்/மரபு ஓவியங்கள் புனரமைப்பு ஓவிய பாதுகாப்பு விதிகளைத் தெரிந்த முனைவர் பட்டம் பெற்ற தொல்லியல் துறை/பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய ஓய்வு பெற்ற ஆசிரியர் அல்லது அயற்பணியில் அழைத்தல் (அயற்பணியில் அழைப்பவருக்கான ஊதிய விகிதப் பாதுகாப்புடன்).

6. மரபு ஓவிய புணரமைப்பாளர்:

  1. முதுகலை – நுண்கலைப் பட்டயப் படிப்பு அத்துடன் காட்சியகப் படிப்பு/புனரமைப்பு மற்றும் ஓவியங்கள் மற்றும் NRLC (National Research Laboratory Conservation of Cultural Property – Lucknow) பயிற்சி சான்றிதழ் பெற்றிருத்தல் (ஓவியப் புனரமைப்பாளர்).
  2. புனரமைப்பு ஓவியர் – புனரமைப்பு ஓவியப்பணியில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் ஓராண்டு பணி அனுபவம். ஏற்கெனவே இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களின் ஒவியங்களை புனரமைப்பு ஓவியர் பணி அனுபவம் பெற்றவர்.

7. ஆய்வு கூட உதவியாளர்:

  1. மேல்நிலைப்பள்ளிப் படிப்பில் (+2) அறிவியல் பாடத்தில் 60% விழுக்காடு எடுத்து தேர்ச்சி பெற்றிருத்தல்.

8. ஆய்வு கூடத்தில் வேதியியல் கருவிகளை சுத்தம் செய்யும் உதவியாளர்:

  • மரபு முறைப்படி ஆய்வகப் பொருட்களை சுத்தம் செய்யும் அனுபவம் மிக்க மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

TNHRCE Recruitment வயது வரம்பு விவரங்கள்:

TNHRCE Recruitment 2024 அறிவிக்கையின் படி வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.

TNHRCE Recruitment சம்பள விவரங்கள்:

பதவியின் பெயர்சம்பளம்
துணை ஆசிரியர்₹.45,000/-
சுவடியியல் வல்லுநர்₹.40,000/-
கணினி வல்லுநர்₹.30,000/-
தொழில் நுட்ப வல்லுநர் / மின்படியாக்கப் பணியாளர் (மின்படியாக்கம்)₹.25,000/-
தொல்லியல் / தொன்மை ஓவியங்கள் குறித்த ஆய்வு அலுவலர்₹.40,000/-
மரபு ஓவிய புணரமைப்பாளர்₹.35,000/-
ஆய்வு கூட உதவியாளர்₹.20,000/-
ஆய்வு கூடத்தில் வேதியியல் கருவிகளை சுத்தம் செய்யும் உதவியாளர்₹.15,000/-

TNHRCE Recruitment கட்டண விவரம்:

இந்த பதவிகளுக்கென எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.

TNHRCE Recruitment தேர்வு செய்யப்படும் முறை:

TNHRCE Recruitment அறிவிக்கையின் படி தேர்வு முறை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் (Interview) மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

TNHRCE Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

TNHRCE Recruitment அறிவிக்கையின் படி விண்ணப்பிக்க வேண்டிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் TNHECE-ன் அதிகார பூர்வ இணையதளமான https://hrce.tn.gov.in/.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிபாணையை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்ட அனைத்து தகவல்களை ஒரு விண்ணப்பப்படிவத்தில் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனைத்து சான்றிதழ் நகல்களை இணைத்து கடைசி நாளுக்குள் அனுப்ப வேண்டும். தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: POST BOX NO. 3304. The Post Master, Nungambakkam MDO, Habibulla Road, (T.Nagar Nort Post Office Upstairs), Nungambakkam, Chennai – 600 034.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க வேண்டிய ஆரம்ப தேதி15.02.2024
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி02.03.2024

முக்கியமான இணைப்புகள்:

இணையதளம்Click Here
அறிவிக்கைClick to Download

Read also:

- Advertisement -
RELATED ARTICLES