Monday, July 8, 2024
HomeTNHRCETNHRCE Recruitment 2023 Apply @www.thhrce.gov.in

TNHRCE Recruitment 2023 Apply @www.thhrce.gov.in

- Advertisement -

அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் வேலை வாய்ப்பு (TNHRCE Recruitment 2023):- தூத்துகுடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள  அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்து மதத்தை சார்ந்த ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணையை https://hrce.tn.gov.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 11.08.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி
வகைவேலை வாய்ப்பு
பதவியின் பெயர்பல்வேறு
காலியிடங்கள்26
கடைசி நாள்11.08.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 26 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
அர்ச்சகர் (உபகோயில்)01
உதவி அர்ச்சகர் – முதன்மை & உபகோயில்02
நாதஸ்வரம் – முதன்மை & உபகோயில்01
தவில் – முதன்மை & உபகோயில்01
மடப்பள்ளி / பரிசாரகர் உபகோயில்02
ஓதுவார் – முதன்மை & உபகோயில்01
பரிசாரகர் – முதன்மை & உபகோயில்01
இரவு காவலர் – முதன்மை & உபகோயில்06
பகல் காவலர் – முதன்மை & உபகோயில்05
திருவலகு – முதன்மை & உபகோயில்04
மின் பணியாளர் – முதன்மை & உபகோயில்01
அலுவலக உதவியாளர் – முதன்மை கோயில்01

TNHRCE Recruitment 2023 கல்வித் தகுதி விபரங்கள்:-

பதவிகல்வித்தகுதி
அர்ச்சகர் (உபகோயில்)
  1. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  2. சைவ ஆகமம் 1 ஆண்டு பயிற்சி நிறைவு செய்ததற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
உதவி அர்ச்சகர் – முதன்மை & உபகோயில்
நாதஸ்வரம் – முதன்மை & உபகோயில்
  1. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  2. நாதஸ்வரம் வாசிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தவில் – முதன்மை & உபகோயில்
  1. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  2. தவில் வாசிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மடப்பள்ளி / பரிசாரகர் உபகோயில்
  1. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  2. திருக்கோயில் பழக்க வழக்கங்களை பின்பற்றி பிரசாதம் மற்றும் நைவேத்தியம் தயாரிக்கும் முறை அறிந்திருக்க வேண்டும்.
ஓதுவார் – முதன்மை & உபகோயில்
  1. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  2. ஓதுவார் பயிற்சி வகுப்பு 3 ஆண்டுகள் நிறைவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பரிசாரகர் – முதன்மை & உபகோயில்
  1. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  2. திருக்கோயில் பழக்க வழக்கங்களை பின்பற்றி பிரசாதம் மற்றும் நைவேத்தியம் தயாரிக்கும் முறை அறிந்திருக்க வேண்டும்.
  3. திருக்கோயில் பூஜை மற்றும் சடங்குகள் போன்ற வழக்கங்களை அறிந்திருக்க வேண்டும்.
இரவு காவலர் – முதன்மை & உப கோயில்
  1. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பகல் காவலர் – முதன்மை & உபகோயில்
திருவலகு – முதன்மை & உபகோயில்
மின் பணியாளர் – முதன்மை & உபகோயில்
  1. ITI அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  2. மின் உரிம வாரியத்தால் வழங்கப்பட்ட “B” சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் – முதன்மை கோயில்8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

மருத்துவ அலுவலர், செவிலியர் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 01.08.2023 தேதியின்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

tnhrce recruitment 2023
அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகன்பட்டி வேலை வாய்ப்பு

TNHRCE Recruitment 2023 பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவிஊதியம்
அர்ச்சகர் (உபகோயில்)₹.11,600 – 36,800/-
உதவி அர்ச்சகர் – முதன்மை & உபகோயில்₹.13,200 – 41,800/-
நாதஸ்வரம் – முதன்மை & உபகோயில்₹.15,300 – 48,700/-
தவில் – முதன்மை & உபகோயில்₹.15,300 – 48,700/-
மடப்பள்ளி / பரிசாரகர் உபகோயில்₹.13,200 – 41,800/-
ஓதுவார் – முதன்மை & உபகோயில்₹.12,600 – 39,900/-
பரிசாரகர் – முதன்மை & உபகோயில்₹.12,600 – 39,900/-
இரவு காவலர் – முதன்மை & உப கோயில்₹.11,600 – 36,800/-
பகல் காவலர் – முதன்மை & உபகோயில்₹.11,600 – 36,800/-
திருவலகு – முதன்மை & உபகோயில்₹.10,000 – 31,500/-
மின் பணியாளர் – முதன்மை & உபகோயில்₹.12,600 – 39,900/-
அலுவலக உதவியாளர் – முதன்மை கோயில்₹.12,600 – 39,900/-

TNHRCE Recruitment 2023 பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

TNHRCE Recruitment 2023 பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் TNHRCE-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://hrce.tn.gov.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களை பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்துடன் கல்வி சான்றிதழ், அனுபவ சான்றிதழ்கள், இருப்பிட சான்றிதழ்கள், ஆதார் அடையாள அட்டை, முன்னுரிமை சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இவற்றை இணைத்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Download Notification PDF & Application Format PDF

- Advertisement -
RELATED ARTICLES