Sunday, July 7, 2024
HomeTNHRCEஅருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் வேலை

அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் வேலை

- Advertisement -

அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் வேலை (Masaniamman Temple Recruitment 2023):- கோவை மாவட்டம், ஆனைமலை வட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ விளம்பர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்து சமயத்தை சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 16.08.2023

இந்த பதவிக்கான அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை கோயிலின் அதிகாரபூர்வ இணையதளமான https://anaimalaimasaniamman.hrce.tn.gov.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், ஆனைமலை, பொள்ளாச்சி
வகைவேலை வாய்ப்பு
பதவியின் பெயர்பல்வேறு
காலியிடங்கள்20
கடைசி நாள்16.08.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

Masaniamman Temple Recruitment 2023 காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 20 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பதவியின் பெயர்காலியிடங்கள்
இளநிலை பொறியாளர்01
இளநிலை உதவியாளர்02
சீட்டு விற்பனையாளர்02
பிளம்பர்01
காவலர்03
துப்புறவாளர்10
தொழில் நுட்ப உதவியாளர்01

Masaniamman Temple Recruitment 2023 கல்வித் தகுதி விபரங்கள்:-

1. இளநிலை பொறியாளர்:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் கட்டிட பொறியியல் (B.E. Civil Engineering) பட்டம்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. இளநிலை உதவியாளர்:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. சீட்டு விற்பனையாளர்:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. பிளம்பர்:

அரசால் / அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் குழாய் தொழில் / குழாய் பணியர் பாடப்பிரிவில் வழங்கப்படும் தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும் தொடர்புடைய பிரிவில் 5 ஆண்டுகள் அல்லது இரண்டு ஆண்டுகள் தொழில் பழகுநர் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

5. காவலர்:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

6. துப்புறவாளர்:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

7. தொழில்நுட்ப உதவியாளர்:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் கட்டிட பொறியியல் (B.E. Civil Engineering) பட்டம்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயது வரம்பானது 01.07.2023 தேதியின்படி குறந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Masaniamman Temple Recruitment 2023
Masaniamman Temple Recruitment 2023

பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவிஊதியம்
இளநிலை பொறியாளர்Level – 31 Rs.35,900 – 1,13,500/-
இளநிலை உதவியாளர்Level – 22 Rs.18,500 – 58,600/-
சீட்டு விற்பனையாளர்Level – 22 Rs.18,500 – 58,600/-
பிளம்பர்Level – 19 Rs.18,000 – 56,900/-
காவலர்Level – 17 Rs.15,900 – 50,400/-
துப்புறவாளர்Level – 10 Rs.10,000 – 31,500/-
தொழில் நுட்ப உதவியாளர்தொகுப்பூதியம் மாதம் 1-க்கு ரூ.15,000/-

Masaniamman Temple Recruitment 2023 பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அருள்மிகு மாசானியம்மன் கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://anaimalaimasaniamman.hrce.tn.gov.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

உதவி ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு மாசானியம்மன் திருக்கோயில், ஆனைமலை நகர் மற்றும் வட்டம், கோவை மாவட்டம் – 642 104.

தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 16.08.2023

Download Notification & Application PDF

- Advertisement -
RELATED ARTICLES